புதுடெல்லி: வாக்கு செலுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக புகார் கூறியதைத் தொடர்ந்து ரூ.100 கோடி கேட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோருக்கு பாஜக மூத்த தலைவர் வினோத் தாவ்டே நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக பொதுமக்களுக்கு வினோத் தாவ்டே பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. பல்கார் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், வாக்காளர்களுக்கு வினோத் தாவ்டே பணம் வழங்கியதாக பகுஜன் விகாஸ் அகாதி தலைவர் ஹிதேந்திர தாக்குர் குற்றம்சாட்டியிருந்தார். வாக்குப்பதிவுக்கு ஒருநாள் முன்னதாக இந்த சம்பவம் நடந்தது.