உலகளவில் ‘மார்கோ’ படம் ரூ.100 கோடி வசூலை கடந்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிசம்பர் 20-ம் தேதி வெளியான இப்படத்தில் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். மலையாளத்தைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளது படக்குழு.