தூத்துக்குடி: “மாதம் ஆயிரம் ரூபாய் உதவி மூலம் பெண்களை மூளைச் சலவை செய்து வாக்குகளைப் பெற வேண்டும் என திமுக நினைக்கிறது,” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று (மே 23) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய 8, 9 மாதங்கள் உள்ளன. கடலூரில் அடுத்தாண்டு ஜனவரி 9-ம் தேதி தேமுதிக மாநாடு நடைபெறவுள்ளது. அதற்குள் தேர்தல் தொடர்பாக முடிவு செய்யப்பட்டு, அந்த மாநாடே மிகப் பெரிய அறிவிப்பு மாநாடாக இருக்கும்.