வட கொரிய அரசாங்கத்துக்காக வேலை செய்பவர்கள் என கருதப்படும் ஹேக்கர்கள், வரலாற்றிலேயே மிக அதிக அளவாக 1.5 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி) அளவுக்கான கிரிப்டோவை கொள்ளையடித்த நிலையில், அதில் குறைந்தது 300 மில்லியன் டாலர் பணத்தை மீட்க முடியாத வகையில் அவர்கள் மாற்றியுள்ளனர். வட கொரியா ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி?