சென்னை: ரூ.39 கோடியில் கீழடி மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார். சென்னையில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார். கீழடி அகழாய்வுத் தளத்தில் ரூ.17 கோடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் ரூ.22 கோடியில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்து ‘இரும்பின் தொன்மை’ என்ற நூலையும் முதலமைச்சர் வெளியிடுகிறார்.
The post ரூ.39கோடியில் அருங்காட்சியகத்துக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.