காசா: இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதிகமாக ரூ.2300க்கு விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் இருந்து சமீபத்தில் வெளியான ஒரு வைரல் பதிவில், பார்லே-ஜி பாக்கெட் 24 யூரோக்களுக்கு மேல் (தோராயமாக ரூ.2,342) விற்கப்படுவதாகக் கூறி பெரும் பரபரப்பை உருவாக்கியது. அந்தப் பதிவில், ‘நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று ரவீப்புக்குப் பிடித்த பிஸ்கட் எனக்குக் கிடைத்தது. விலை 1.5 யூரோக்களிலிருந்து 24 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தாலும், ரவீப்புக்குப் பிடித்த விருந்தை என்னால் மறுக்க முடியவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
The post ரூ.5 பார்லே-ஜி பிஸ்கட் காசாவில் ரூ.2,300: அதிர்ச்சி வீடியோ வெளியீடு appeared first on Dinakaran.