தமிழகத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, ஜனவரி 31-ம் தேதி தெலுங்கிலும் வெளியாகிறது ‘மதகஜராஜா’. இப்படம் இதுவரை ரூ.50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி வெளியான படம் ‘மதகஜராஜா’. அனைத்து பிரச்சினைகளையும் கடந்து சுமார் 12 ஆண்டுகள் கழித்து இப்படம் திரைக்கு வந்தது. யாரும் எதிர்பாராத வகையில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதுவரை சுமார் ரூ.50 கோடி வசூல் செய்திருக்கிறது. இதன் வசூலைப் பார்த்து பல்வேறு வர்த்தக நிபுணர்கள் ஆச்சரியத்தில் இருக்கின்றனர்.