தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டாலும், சந்தையில் அரிசி விலையும் குறைந்து வரும் வித்தியாசமான சூழல் உருவாகியுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அரிசி விலை கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை குறையும் என்று அரிசி மில் உரிமையாளர்களும், வணிகர் சங்கங்களும் தெரிவிக்கின்றன. அதற்கு என்ன காரணம்? அதனால் விவசாயிகளுக்கு என்ன பாதிப்பு?