Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
      • நியூஸ் 18 தமிழ்நாடு
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் பொதுமக்களின் பார்வைக்கு நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Share
Notification Show More
Font ResizerAa
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • நியூஸ் 7 டிவி நேரலை
  • புதிய தலைமுறை டிவி
  • நியூஸ் 18 தமிழ்நாடு
  • சத்தியம் செய்திகள்
  • கலைஞர் செய்திகள்
  • ஜெயா நியூஸ்
  • பிபிசி தமிழ் நியூஸ்
  • மக்கள் டிவி நேரலை
  • தந்தி நியூஸ் டிவி
  • சன் நியூஸ் டிவி
Search
  • தொலைக்காட்சி
    • புதிய தலைமுறை டிவி
    • சன் நியூஸ் டிவி
    • பாலிமர் நியூஸ் டிவி
    • தந்தி நியூஸ் டிவி
    • நியூஸ் 7 டிவி
    • சத்தியம் செய்திகள்
    • கலைஞர் செய்திகள்
    • பிபிசி தமிழ் நியூஸ்
    • ஜெயா நியூஸ்
    • மாலைமுரசு டிவி
    • DD பொதிகை செய்திகள்
    • ராஜ் நியூஸ்
    • மக்கள் டிவி
    • புதுயுகம் தொலைக்காட்சி
    • லங்காஸ்ரீ செய்திகள்
    • IBC தமிழ் செய்திகள்
    • RT உலக செய்திகள்
  • தலைப்பு செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    • விளையாட்டு
    • வணிகம்
    • கல்வி
    • தொழில்நுட்பம்
  • யூடியூப் சேனல்கள்
    • The News Minute Tamil
    • Puthiya Boomi Tamil
    • Jeeva Today Tamil Channel
    • Pettai Tv
    • RT உலக செய்திகள்
    • Minnambalam TV Tamil Channel
    • 25Q Tamil TV Channel
    • Peralai Tamil Channel
    • Liberty Tamil Channel
    • Opinion Tamil Channel
    • Red Pix 24X7
  • செய்தி பிரிவுகள்
    • செய்தித்தாள்கள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • இலங்கை செய்திகள்
    • உலகம்
    • அரசியல்
    • அறிவியல்
    • ஆரோக்கியம்
    • கட்டுரை
    • கல்வி
    • கார்டூன்
    • சட்டம்
    • சிந்தனைக் களம்
    • சுற்றுப்புறம்
    • தேர்தல்
    • பயங்கரவாதம்
    • பொருளாதாரம்
    • பொதுவானவை
    • போராட்டம்
    • போர்
    • மருத்துவம்
    • வர்த்தகம்
    • விபத்து
    • விமர்சனம்
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • வீடியோ
    • கலாச்சாரம்
  • நியூஸ் பேப்பர்
    • இந்து தமிழ்
    • தினகரன்
    • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Have an existing account? Sign In
Home » Blog » ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் பொதுமக்களின் பார்வைக்கு நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
Dinakaran Tamilnadu

ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் பொதுமக்களின் பார்வைக்கு நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

EDITOR
Last updated: June 20, 2025 10:33 am
EDITOR
Published June 20, 2025
Share
SHARE

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் பொதுமக்களின் பார்வைக்கு நாளை (21.6.2025) மாலை திறந்து வைக்கிறார்கள். முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக 60க்கும் மேற்பட்ட அரசாணைகள் பிறப்பித்து சலுகைகள் வழங்கியதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் திரண்டு முதலமைச்சர் அவர்களுக்கு மாபெரும் பாராட்டு விழா நடத்தவுள்ளனர்.

பூம்புகார் பெருந்தச்சன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1974, 1975 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் கலைச்செல்வம் வள்ளுவர் கோட்டம். இந்த வள்ளுவர் கோட்டம் சுற்றுலா மையமாக எழுச்சிபெற்று உலகத் தமிழ் அறிஞர்களாலும், தமிழ்நாட்டு மக்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வள்ளுவர் கோட்டத்தின் முன் நிறுவப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்தநாளின்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக சென்றபோது, வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்கள்.

அப்போது, முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியில் பராமரிக்கப்படாமல் பாழ்பட்டிருந்த வள்ளுவர் கோட்டத்தின் தோற்றத்தைப் பார்த்து மிகவும் நொந்து வேதனைக்கு ஆளானார்கள். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் வந்தபின், அதிகாரிகளை அழைத்து வள்ளுவர் கோட்டத்தைப் புதுப்பித்திட வேண்டும் என்ற உணர்வோடு திட்டமிட்டு ரூ.80 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெறும் என்று அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தார்கள். அதன் பயனாக, வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டு எழிற்கோலம் கொண்டுள்ளது.

தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பளவில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான “அய்யன் வள்ளுவர் கலையரங்கம்” மேம்படுத்தப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களையும் கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு – ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது “குறள் மணிமாடம்”.100 பேர் அமரும் வசதியுடன் “திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம்” இலக்கிய விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப்பகுதிகளில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட வருகைபுரியும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 3,336 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.உணவகப் பகுதியில் 72 பேர் அமரவும், காபி அருந்தும் பகுதியில் 24 பேர் அமரக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.

275.56 சதுர அடி பரப்பளவு கொண்ட நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அருகே அமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலையை நோக்கிப் பார்வையாளர்கள் தடையின்றிச் செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய “வேயா மாடம்” ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர்த் தேர் வடிவில் 106 அடி உயரமுடைய திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.பார்வையிடும் பொதுமக்கள் உள்ளம் மகிழும் வகையில் இசை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மகத்தான முறையில் புனரமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் நாளை மாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்துவைக்கப்படுகிறது. முதலமைச்சர் அவர்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கும் மாற்றுத்திறனாளிகள் புனரமைக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக நாளை மாலை மாற்றுத்திறனாளிகள் முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பாராட்டு விழா நடத்துகிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் பயன்தரத்தக்க வகையில் 60க்கும் மேற்பட்ட அரசாணைகளை பிறப்பித்திருக்கிறார்கள். உள்ளாட்சி நிறுவனங்களில் 13,988 மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை மெரினா, பெசன்ட் நகர், ஆகிய பகுதிகளில் மாற்றுத் திறனாளிகள் எளிதில் கடல் நீரைத் தொட்டு கால்பதித்து மகிழத்தக்க வகையில் இரண்டு அணுகுசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்ட சிறப்பு ஆணையம், விபத்து நிவாரணத் தொகை உயர்த்தி வழங்கியமை, நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி, பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் சிறந்த ஆசிரியர்களுக்கு மாநில விருதான “ஹெலன் கெல்லர்” விருது வழங்குதல், ஒரு கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம், முனைவர் பட்டத்திற்குப் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூபாய் ஒரு இலட்சம் ஊக்கத் தொகை, மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களுக்கு துறைத் தேர்விலிருந்து விலக்கு, வணிக வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத கடை ஒதுக்கீடு, மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் ரூ.1,000 என்பது ரூ.1,500 ஆக உயர்த்தியது, கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1,500 என்பது ரூ.2,000 ஆக உயர்த்தியமை, மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கியது உட்பட அனைத்துச் சலுகைகளுக்கும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் எனும் பெயரைச் சூட்டி, அவர்கள் மனதிலிருந்த குறைகளை அகற்றியவர் என்பதை நினைவுகூரும் இந்த வேளையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் சமூகப் பொருளாதார நிலைகள் உயரும் வகையில் இதுவரை எந்த அரசும் செய்திடாத பல புதிய சலுகைகளை வழங்கி மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் வளம் சேர்த்துள்ளார்கள்.

முதலமைச்சர் அவர்கள் வழங்கிய எண்ணற்ற சலுகைகளை நினைந்து மகிழ்ந்து தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்று கூடி வள்ளுவர் கோட்டத்தில் மிகப்பெரிய நன்றி அறிவிப்புப் பாராட்டு விழா நடத்துகிறார்கள். வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக மாற்றுத்திறனாளிகளின் பாராட்டு விழா 21.6.2025 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் கோலாகலமாக நடைபெறுகிறது.

The post ரூ.80 கோடியில் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் பொதுமக்களின் பார்வைக்கு நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Share This Article
Facebook Email Print
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News

ஏற்காடு, ஏலகிரியில் ரோப் வே திட்டம்: விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர்!

EDITOR
EDITOR
June 20, 2025
சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், கயாது லோஹர்!
கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்ட தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
2023-ல் சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு: வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் ஆய்வு
இஸ்ரேல் மீது ஈரான் அதிபயங்கர தாக்குதல்: கொத்து குண்டுகளை வீசியதால் பெரும் சேதம் – பாதிப்பு எத்தகையது?

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Categories

  • ES Money
  • U.K News
  • The Escapist
  • Insider
  • Science
  • Technology
  • LifeStyle
  • Marketing

About US

We influence 20 million users and is the number one business and technology news network on the planet.

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.
  • Advertise with Us
  • Disclaimer
  • GDPR
  • Privacy Policy
  • Contact Us
  • About Us
  • Terms and Conditions
adbanner
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?