உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜா, நரேன், சீதா, பரணி, விக்னேஷ் நடிக்கும் படம், 'சோழநாட்டான்’. பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு எஃப்.எஸ்.ஃபைசல் இசையமைக்கிறார். செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் என்ற நிறுவனம் மூலம்மும்பை தொழிலதிபர் மாரியப்பன் முத்தையா தயாரிக்கிறார். இதன் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.
படம்பற்றி பேசிய பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா, "தஞ்சாவூரில் ஆரம்பித்து சென்னையில் தொடர்வது போன்ற கதையை கொண்ட படம் இது. ரேக்ளா பந்தய பின்னணியில் உருவாகும் இந்தப் படம் மலைவாழ் மக்களின் பெரும் துயரத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது. இதில் பிரபலமான நடிகர் ஒருவர் வில்லன்வேடத்தில் நடிக்கிறார். அவர் பற்றிய விவரம் பின்னர் வெளியிடப்படும். சோழர்களின் தேசமான தஞ்சாவூர் மண்ணின் தனிச்சிறப்பைத் திரையில் சொல்லும் விதமாக இந்தப்படம் தயாராகிறது." என்றார்.