ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம், ‘பறந்து போ’. இதில் அவருடன் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், மாஸ்டர் மிதுல் ரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி படமாக உருவாகியுள்ள இதை செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் வழங்குகிறது. இந்தப் படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில், லைம்லைட் பிரிவில் திரையிடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டது.
இதற்காக இயக்குநர் ராம், மிர்ச்சி சிவா, மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். இந்தப் படம் நேற்று அங்கு திரையிடப்பட்டது. பட விழா முடிந்து, வரும் 13-ம் தேதி சென்னை திரும்புவதாக இயக்குநர் ராம் தெரிவித்தார்.