லக்னோ: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்ன்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் குவித்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நடப்பு சீசனை பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வியுடன் தொடங்கிய குஜராத் அணி அதன் பின்னர் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ளது. கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.