
லாகூர்: பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. இமாம் உல் ஹக் 93, கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள் சேர்த்தனர்.
முகமது ரிஸ்வான் 62, சல்மான் ஆகா 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 110.4 ஓவர்களில் 378 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. முகமது ரிஸ்வான் 75, சல்மான் ஆகா 93 ரன்களில் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் செனுரன் முத்துசாமி 6 விக்கெட்களை வீழ்த்தினார். பிரனலன் சுப்ராயன் 2 விக்கெட்கள் கைப்பற்றினார்.

