வணிக விமானங்கள் பறப்பதை தடை செய்யும் வகையில் தங்களது வான்பரப்பை மூட பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கூறுகையில், “ லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் வகையில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளது. இருப்பினும் கராச்சி விமான நிலையம் மட்டும் செயல்பாட்டில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.