மும்பை: குஜராத்தின் சபர்மதி சிறையில் பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளார். சிறையில் இருந்தபடியே அவர் பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.
லாரன்ஸ் பிஷ்னோயின் தம்பி அன்மோல் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி மத்திய அரசு அமெரிக்காவிடம் கோரியது.