அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரின் சில பகுதிகளில் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது.காட்டுத் தீ காரணமாக, குறைந்தது 11 பேர் இங்கு இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் எரிந்துள்ளன. தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, வரும் நாட்களில் இந்த தீ மேலும் பரவலாம் என அஞ்சப்படுகிறது.