கலிபோர்னியா: லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தேசிய ராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்தது. கார்களுக்கு தீ வைத்து எரித்து, ஒரு பெரிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் மூடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும், அமெரிக்க காவல் துறையின் நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்டுள்ள கலவரத்தை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ட்ரூத் சமூக வலைதளத்தில், “ஒரு காலத்தில் சிறந்த அமெரிக்க நகரமான லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத வேற்றுகிரகவாசிகள் மற்றும் குற்றவாளிகளால் படையெடுக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்போது, வன்முறை, கிளர்ச்சி கும்பல்கள் எங்கள் கூட்டாட்சி ராணுவத்தை தாக்கி வருகின்றன. ஆனால், இந்த சட்டவிரோத கலவரங்கள் எங்கள் உறுதியை வலுப்படுத்துகின்றன.