விஜயநகரம்: லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் ஆட்டமிழக்காமல் அதிக ரன்கள் குவித்து இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் உலக சாதனை படைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் நேற்று விஜய் ஹசாரே டிராபிக்கான போட்டியில் விதர்பா, உத்தர பிரதேச அணிகள் மோதின. இதில் விதர்பா அணிக்காக விளையாடிய கருண் நாயர், 112 ரன்கள் எடுத்தார். இந்தத் தொடரில் 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்த கருண் நாயர் மொத்தம் 542 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்துள்ளார். கடைசி போட்டியில் மட்டுமே அவர் அவுட் ஆனார்.