வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையில், மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நிலையில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலின் தொடர் வேண்டுகோளுக்கு ஏற்ப நாளை வரை அந்த உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணிக்கு இவ்வழக்குகள் மீண்டும் விசாரணக்கு வரவுள்ளது.