புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணையை மே 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல்வேறு தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (மே 5) மீண்டும் விசாரணைக்கு வந்தன.