புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா, சட்டமாகும்போது ஏழை முஸ்லிம்களும், விதவைகளும் பயனடைவார்கள் என்று வக்பு திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்துள்ளார்.
வக்பு மசோதாவுக்கு எதிராக அசாதுதின் ஒவைசி மக்களவையில் நேற்று (திங்கள்) பேசிய நிலையில், அவருக்கு பதில் அளிக்கும் விதமாக ஜகதாம்பிகா பால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்வது தொடர்பான விவாதத்தின்போது பேசிய மெஹபூபா முப்தி, சட்டம் ரத்து செய்யப்பட்டால் ரத்த ஆறு ஓடும் என்று கூறியிருந்தார். ஆனால், அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதால் ஜம்மு காஷ்மீர் பலனடைந்துள்ளது.