பெங்களூரு: வக்பு சட்டத் திருத்த‌ மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக காங்கிரஸ் அமைச்சர்கள் கறுப்பு பட்டை அணிந்து ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வக்பு சட்டத் திருத்த சட்ட மசோதாவுக்கு பெரும்பான்மையான முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் ரம்ஜான் திருநாளான நேற்று கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஹஜ் துறை அமைச்சர் கே.ரஹ்மான் கான் ஆகியோர் நேற்று பெங்களூருவில் தொழுகையில் ஈடுபட்டனர்.