பெங்களூரு: வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, தீவிர இஸ்லாமிய சக்திகளால் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் திட்டமிட்ட வன்முறை, அநீதி மற்றும் ஒடுக்குமுறை பெரும் கவலையை அளிப்பதாக ஆர்.எஸ்.எஸ் தெரிவித்துள்ளது.
ராஷ்ட்ரிய சுயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபா (ஏ.பி.பி.எஸ்) கூட்டத்தின் இரண்டாவது நாளில், வங்கதேசம் குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், "வங்கதேசத்தில் தீவிர இஸ்லாமிய சக்திகளால் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான மற்றும் திட்டமிடப்பட்ட வன்முறை, அநீதி மற்றும் ஒடுக்குமுறை குறித்து அகில பாரதிய பிரதிநிதி சபா தனது தீவிர கவலையை வெளிப்படுத்துகிறது. இது மனித உரிமை மீறலின் ஒரு தீவிரமான பிரச்சினை.