கொழும்பு: வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றுள்ளது. மேலும், தொடரை 1-0 என்ற கணக்கில் அந்த அணி கைப்பற்றியது.
இலங்கை – வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் நடைபெற்று வந்தது. இதில் முதலில் விளையாடிய வங்கதேசம் 79.3 ஓவர்களில் 247 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 458 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இலங்கை முதல் இன்னிங்ஸில் 211 ரன்கள் முன்னிலை பெற்றது.