ஷார்ஜா: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி தொடரை 2-1 என கைப்பற்றி சாதனை படைத்தது.
வங்கதேச அணி, ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு ஷார்ஜாவில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 11 ஓவர்களில் 71 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது.