சோழவந்தான்: வங்கியில் அடகு வைக்கப்பட்ட நகைகளை எடுத்து ஆன்லைனில் சூதாடி மோசடியில் ஈடுபட்டதாக துணை மேலாளர் கைது செய்யப்பட்டார்.மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு அடகு வைக்கும் வாடிக்கையாளர்களின் நகைகளை மோசடி செய்வதாக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் சென்றது. அதிகாரிகள் வங்கியில் நேற்று முன்தினம் ஆய்வு செய்ததில், இருப்பு பதிவேட்டில் உள்ள 9 வாடிக்கையாளர்களின் 561.5 கிராம் (70 பவுன்) நகைகளை வங்கி லாக்கரில் காணவில்லை.
இதையடுத்து விசாரணை செய்ததில், துணை மேலாளரான கணேஷ் (33) ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளார். ஏற்கனவே குடும்பத்தினர், நண்பர்களிடம் வாங்கிய பல லட்சம் ரூபாயை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளார். தொடர்ந்து சூதாட பணம் இல்லாததால், வங்கியில் அடகு வைத்த சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 70 பவுன் நகைகளை எடுத்துச் சென்று சூதாடி மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் கணேஷை கைது செய்தனர்.
The post வங்கியில் அடகு வைத்த நகைகளை எடுத்து ஆன்லைனில் சூதாடி மோசடி: துணை மேலாளர் கைது appeared first on Dinakaran.