சென்னை: வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ஒன்றிய அரசு அனைவரும் வங்கிக் கணக்குகளைத் திறக்க வலியுறுத்தியது. பின்னர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை வந்தது, டிஜிட்டல் இந்தியாவை முன்னிறுத்தியது.
ஏடிஎம் மையங்களில் கார்டுகளைப் பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவைகளுக்கான கட்டணங்களை மத்திய ரிசர்வ் வங்கி மாற்றியமைத்துள்ளது. ஒரு வங்கிக் கணக்கில் இருந்து, மற்றொரு வங்கியின் ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் ரூ.17-ல் இருந்து, ரூ.2 அதிகரிக்கப்பட்டு ரூ.19-ஆக நிர்ணயிக்க வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேலும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை தாண்டினால் மே 1ஆம் தேதி முதல் கூடுதலாக ரூ.2 வசூலிக்கப்படும். அதாவது அதே வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி இலவச பரிவர்த்தனைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கான கட்டணம் ரூ.21-லிருந்து ரூ.23ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருவர் அவருடைய சொந்த வங்கி ஏடிஎம்மில் மாதம் 5 முறை இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடதக்கது.
தைப்போல, பிற வங்கி ஏடிஎம்களில் மெட்ரோ நகரமாக இருந்தால் மாதம் 3 முறை கூடுதலாக இலவச பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். மெட்ரோ நகரமல்லாத பிற பகுதிகளாக இருந்தால் மாதம் 5 முறை இலவச பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். பணம் எடுப்பது மட்டுமல்லாமல், இருப்பைச் சரிபார்ப்பது மற்றும் மினி ஸ்டேட்மென்ட் எடுப்பது உள்ளிட்டவையும்கூட ஒரு பரிவர்த்தனையாகக் கணக்கில் கொள்ளப்படும். அந்த வகையில், பேலன்ஸ் சோதித்தல், மினி ஸ்டேட்மென்ட் எடுத்தல் ஆகியவற்றுக்கு, ரூ.1 அதிகரிக்கப்பட்டு, ரூ.6-ல் இருந்து ரூ.7-ஆக கட்டணம் உயரும் எனத் தெரிகிறது
அதைத் தொடர்ந்து என்ன நடந்தது? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், குறைந்த இருப்புக்கான அபராதம், இப்போது ரிசர்வ் வங்கி வங்கிகள் மாத வரம்பிற்கு மேல் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க அனுமதித்துள்ளது. இது மக்கள் தங்களுக்குத் தேவையானதை விட அதிகமாக பணம் எடுக்கச் செய்யும், குறிப்பாக, ஏழைகளின் நிதி உள்ளடக்கத்தின் நோக்கங்களை மறுக்கும்.
100 நாள் வேலைத் திட்ட பயனாளிகள், ஏற்கனவே நிதி இல்லாமல் தவிக்கின்றனர், மேலும் எங்கள் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பணப் பரிமாற்றங்களால் பயனடையும் ஏழைகள் தான் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது நிறுவனமயமாக்கப்பட்ட பிரித்தெடுத்தல். ஏழைகள் தேய்த்தல், பணக்காரர்கள் புன்னகை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுக்க கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.