சீனா: சீன புத்தாண்டையொட்டி களைகட்டிய வசந்தகால விழாவை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சீனாவில் வசந்தகால விழா நெருங்கி வருவதால் மக்கள் கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது. தங்கள் வீடுகளை அலங்கரித்து மக்கள் உற்சாகம் அடையும் அதேநேரத்தில் முக்கிய நகரங்களின் சாலைகள், கட்டடங்கள் வீதிகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. சாலைகள் முழுவதும் அலங்கார வளைவுகளை அமைக்கப்பட்டு மகிழ்ச்சியான பண்டிகை சூழ்நிலையை உருவாக்கியது.
முக்கிய நகரங்களில், பிரபல வீதிகள் எங்கும் செந்நிற விளக்கு அலங்காரங்கள், சாலைகள், மரங்களை அலங்கரித்து உள்ளன. வண்ண விளக்குகளால் ஜொலித்த டிராகன் உள்ளிட்ட வடிவங்கள் மக்களை வெகுவாக ஈர்த்தது. இப்பகுதிகளில் குடும்பத்துடன் குவியும் மக்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஒளிரும் டிராகன் நடனம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. 298 மீட்டர் நீளம் உடைய இந்த ஒளிரும் டிராகன் வட்டமிட்டும், வளைவும், நெளிவுமாக சென்று உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும், மிக நீளமான ஒளிரும் டிராகன் நடனமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
The post வசந்த கால விழாவை கொண்டாட தயாராகும் சீன மக்கள்: கின்னஸ் சாதனை படைத்த ஒளிரும் டிராகன் நடனம் appeared first on Dinakaran.