புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, "அட்வான்டேஜ் அசாம் 2.0" உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2025- உச்சி மாநாட்டை கவுகாத்தியில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர், வடகிழக்கிற்கு இன்று முதல் புதிய எதிர்காலம் தொடங்குவதாக தெரிவித்தார்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் முன்னிலையில் பிரதமர் மேலும் பேசியதாவது: கிழக்கு இந்தியா மற்றும் வடகிழக்கு நிலம் இன்று ஒரு புதிய எதிர்காலத்தை தொடங்குகிறது.