ஒரு குறிப்பிட்ட மக்களின் வாழ்வியல், பழக்கவழக்கங்கள், மொழி, பண்பாடு, கலை, இலக்கியம், சடங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதை ‘வட்டார நாட்டுப்புறக் கூறுகள்’ என்பார்கள். அந்த வட்டாரத்தின் சிறப்பினை வெளிப்படுத்தும் கூறுகளாக இவை அமையும்.
அன்றைய மக்களிடையே புழக்கத்தில் இருந்த உறவு முறைச் சொற்கள் இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளன. அந்த வகையில், அம்மா, அப்பா, மாமா, அக்கா, அண்ணா, தாத்தா, ஐயா என்று உறவு முறைகளைக் குறிக்கும் சொற்களான அம்மன், அப்பன், மாமன், அக்கை, அண்ணன், தாத்தன், அய்யன் ஆகிய சொற்கள் தற்போதும் கையாளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக, ‘பண்பாட்டு வழக்கில் உறவு முறை சொற்கள்’ என்ற நூலில் அதன் நூலாசிரியர் முனைவர் நா.சுலோச்சனா விளக்கமாக விவரித்துள்ளார்.