சென்னை: வணிக பயன்பாட்டுக்கான சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.41 குறைந்து. புதிய விலை இன்று (ஏப்ரல் 1) முதலே அமலுக்கு வந்துள்ளது.
இண்டேன், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (ஹெச்பி) போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன.