தாம்பரம்: தாம்பரம் அருகே பர்னிச்சர் கடையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ₹30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமாகியுள்ளது. தாம்பரம் அடுத்த வண்டலூர்-கேளம்பாக்கம் பிரதான சாலை கீழக்கோட்டையூர் பகுதியில் பர்னிச்சர் கடை உள்ளது. இந்த கடையை ஜாகீர்உசேன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கடையில் இருந்து கரும்புகை வெளியேறி உள்ளது.
சில நிமிடங்களில் தீ பற்றி எறிய தொடங்கிது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி தாம்பரம், மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு வந்த வீரர்கள் சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருந்தபோதிலும் பர்னிச்சர் கடையில் இருந்த ₹30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது, மின் கசிவால் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் பர்னிச்சர் கடை தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post வண்டலூர் பர்னிச்சர் கடையில் தீ appeared first on Dinakaran.