மேற்கு வங்கத்தில் வக்பு சட்டதிருத்த மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் 10 போலீஸார் காயம் அடைந்தனர். ரயில் மீது கற்கள் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் வழங்கினார்.