சென்னை: 43 வயதான மகேந்திர சிங் தோனி தனது 18-வது ஐபிஎல் சீசனில் விளையாட உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான அவர், தற்போது அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது மைல்கல் சாதனைகளை பார்க்கலாம்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் தோனிக்கான மவுசு என்பது இமியளவும் குறையவில்லை. சிஎஸ்கே அணியின் சொந்த மைதானமான சென்னை மட்டுமல்லாது ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் விளையாட செல்லும் இடமெல்லாம் மஞ்சள் படைகள் படையெடுப்பே அதற்கு சான்று. புள்ளிவிவரங்கள், அதன் நம்பர்கள் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர் தோனி. விளையாட்டை நேசிக்கும் அனைவரும் இதை ஏற்பாளர்கள். இருப்பினும் ஐபிஎல் களத்தில் அவரது நம்பரும் பேசுகிறது.