சென்னை: மகப்பேறு அறுவை சிகிச்சையில் வயிற்றில் பேண்டேஜை வைத்து தைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க தனியார் மருத்துவமனைக்கும், சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. பிரீத்திக்கு தையல் போட்ட இடத்தில் ரத்த கசிவு ஏற்பட்டதால் சென்னை அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரீத்தியை பரிசோதித்ததில் வயிற்றில் பேண்டேஜ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கவனக்குறைவாக செயல்பட்ட தனியார் மருத்துவமனை ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க கோரி நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை கட்டணம் ரூ.3.26 லட்சமும், வழக்குச் செலவு ரூ.10,000மும்,இழப்பீடு ரூ.10 லட்சமும் சேர்த்து ரூ.13.36 லட்சம் வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post வயிற்றில் பேண்டேஜ்: ரூ.10 லட்சம் இழப்பீடு தர ஆணை appeared first on Dinakaran.