அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து அதிகரித்துள்ளதால் விலைகள் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இன்று காலை 750 வாகனங்களில் இருந்து 8ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளது. இதன்காரணமாக கடந்த வாரத்தைவிட 20 முதல் 30 ரூபாய் வரை காய்கறிகள் விலை குறைந்து உள்ளது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் 40 ரூபாய்க்கும் தக்காளி 25க்கும் சின்னவெங்காயம் 120 ரூபாயில் இருந்து 100 க்கும் கேரட் 70 லிருந்து 30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோல், உருளைகிழங்கு 40 லிருந்து 25 க்கும் பீன்ஸ் 60 லிருந்து 35 க்கும் முள்ளங்கி 50 லிருந்து 20 க்கும் பீட்ரூட் 60 லிருந்து 35 க்கும் சவ் சவ் 30 லிருந்து 10 க்கும் கோஸ் 30 லிருந்து 10 க்கும் கத்திரிக்காய் 40 லிருந்து 10 க்கும் வெண்டைக்காய் 40 லிருந்து 30க்கும் காராமணி 35 லிருந்து 25 க்கும் சேனைக்கிழங்கு 60 லிருந்து 40 க்கும் விற்பனை செய்து வருகின்றனர்.
இதுதவிர, முருங்கைக்காய் 90 லிருந்து 60 க்கும் சேமகிழங்கு 50 லிருந்து 30 க்கும் காலிபிளவர் 30 லிருந்து 10 க்கும் வெள்ளரிக்காய் 20 லிருந்து 10க்கும் பச்சை மிளகாய் 35 லிருந்து 25 க்கும் பட்டாணி 50 லிருந்து 30 க்கும் இஞ்சி 40 லிருந்து 30 க்கும் அவரைக்காய் 50 லிருந்து 30 க்கும் பீரக்கங்காய் 40 லிருந்து 20 க்கும் எலுமிச்சை பழம் 50 லிருந்து 40 க்கும் நூக்கள் 25 லிருந்து 15 க்கும் கோவைக்காய் 40 லிருந்து 25க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post வரத்து அதிகரிப்பு எதிரொலி கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை குறைந்தது appeared first on Dinakaran.