புதுடெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 2023-24-ல் 778.21 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று உச்சத்தைக் கண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 2023-24-ல் 778.21 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டி வரலாற்று உச்சத்தைக் கண்டுள்ளது. இது 2013-14-ல் 466.22 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிருந்து 67% அதிகரிப்பைக் குறிக்கிறது. வணிகப் பொருட்கள், சேவைகள் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் வலுவான செயல்திறனால் ஊக்குவிக்கப்பட்டு, உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் விரிவாக்கப் பங்கை இந்த வளர்ச்சி பிரதிபலிக்கிறது.