பெய்ஜிங்: சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த சூழலில் அரிய வகை தனிமங்களை வழங்க சீனா மறுப்பதால் அந்த நாட்டின் பொருட்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சீன வர்த்தக துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பெய்ஜிங்கில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சீனாவின் செமி கண்டக்டர், சிப் உட்பட சுமார் 3,000 வகையான பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. சீனாவை பொறுத்தவரை சுமார் 900 பொருட்களுக்கு மட்டுமே தடை விதித்து இருக்கிறோம். அமெரிக்காவின் நடவடிக்கைகளால் சீன நிறுவனங்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன.