இந்திய அரசாங்கம் பொருளாதாரத்தை ஊக்குவிக்க கார்பரேட் வரி குறைப்பு, உற்பத்தி மானியம், கடன் கிடைப்பதில் இருந்த சிக்கல்கள் நீக்கம், ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் பாதியாகக் குறைப்பு என்று பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் தனியார் நிறுவனங்கள் அதிக லாபம் பார்த்துள்ளன. ஆனாலும் கூட, அந்த நிறுவனங்கள் புதிதாக தொழில் தொடங்குவதில் ஆர்வம் காட்டாதது ஏன்?