புதிய வருமான வரிச் சட்டம்-2025 அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், அதில் வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள வானளாவிய அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
வருமான வரி செலுத்துவோர் வரி ஏய்ப்பு செய்வதாக அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தால், அவர்களது வீடு, தொழில் நிறுவனங்கள் மற்றும் உடைமைகள் இருக்கும் இடங்களில் எந்தவித முன்னறிவிப்புமின்றி சோதனை நடத்த ஏற்கெனவே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பூட்டியிருக்கும் அறை, பெட்டகம், ஒளித்து வைத்திருக்கும் இடங்களை யாருடைய அனுமதியுமின்றி உடைத்து சோதனை நடத்தும் அதிகாரம் அவர்களுக்கு உண்டு.