சென்னை: “2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்குக்கான வருவாய் வரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருப்பதும், மக்களின் நலன் சார்ந்து மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்துக்காக சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வருமான வரி விலக்குக்கான வருவாய் வரம்பு ரூ.12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டிருப்பதும், மக்களின் நலன் சார்ந்து மேலும் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில் தமிழகத்துக்காக சிறப்புத் திட்டம் எதுவும் அறிவிக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது.