தஞ்சாவூர்: தஞ்சாவூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், அமமுக துணை பொதுச் செயலாளருமான ரெங்கசாமி வீட்டில் நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் 7 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். அமமுக பொதுச்செயலாளர் ரெங்கசாமியின் இல்லம் தஞ்சாவூர் மாவட்டம் தளவாய்பாளையத்தில் அமைந்துள்ளது. இவர் கடந்த 2011 முதல் 2016 வரை தஞ்சாவூர் எம்எல்ஏவாக இருந்தபோது வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை 7மணி நேரம் தொடர்ந்து அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி அன்பரசன் தலைமையில் 5 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். தற்போது ெரங்கசாமி சென்னையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. வீட்டில் அவரது மகன் மட்டுமே உள்ள நிலையில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் எந்த ஆவணங்களும் கைப்பற்றவில்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவதை அறிந்து அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன் குவிந்தனர். பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
The post வருவாய்க்கு அதிகமாக சொத்து குவிப்பு புகார்; அமமுக நிர்வாகி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு: தஞ்சையில் பரபரப்பு appeared first on Dinakaran.