சென்னை: வருவாய் மாவட்ட அளவில் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்படும் என சட்டப்பேரவையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக, மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் உள்ளிட்ட அனைத்து புற்றுநோய்களையும் கண்டறியும், முழு பரிசோதனை இன்னும் 10 நாட்களில் வருவாய் மாவட்ட அளவில் தொடங்க உள்ளது.
இளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க HPV தடுப்பூசி செலுத்த ரூ.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, அங்கன்வாடிகளில் 7900 புதிய பணியாளர்கள் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். 8900 சத்துணவு சமையலர்கள் நியமிக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
The post வருவாய் மாவட்ட அளவில் பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: சட்டப்பேரவையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு! appeared first on Dinakaran.