சேலம்: காஸ் சிலிண்டர் விலை மாதந்தோறும் 1ம் தேதி மாற்றியமைக்கப்படுகிறது. தொடர்ந்து 14வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. அதே வேளையில், நேற்று வெளியான புதிய விலைப்பட்டியலில், 19 கிலோ எடை கொண்ட வர்த்தக காஸ் சிலிண்டர் விலை இம்மாதத்திற்கு ரூ.41 முதல் ரூ.44 வரை குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் வர்த்தக காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் ரூ.1,965 என இருந்த நிலையில், ரூ.43.50 குறைந்து ரூ.1,921.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ரூ.1,914ல் இருந்து ரூ.43.50 குறைந்து ரூ.1,870.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
The post வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.43.50 குறைப்பு: சென்னையில் ரூ.1,921.50 ஆக நிர்ணயம் appeared first on Dinakaran.