சென்னை: வளர்ப்பு நாய்களுக்கான கண்காட்சியில் 5 பரிசுகளை வென்ற, காவல் மோப்ப நாய் பிரிவுக்கு காவல் ஆணையர் அருண் பாராட்டு தெரிவித்தார்.
குற்ற வழக்குகளில் துப்புத்துலக்க, கொலை, கொள்ளை, வெடிகுண்டு கண்டறிதல், போதைப் பொருட்கள் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் காவல் துறையினருக்கு எளிதில் குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க மோப்ப நாய் படைப் பிரிவு உதவி வருகிறது. இதற்காக மோப்ப நாய்களுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.