பொன்னை: தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சார்பில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. மேலும் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களும் வழங்கப்படுகிறது. அதன்படி வேலூர் மாவட்டம் ெபான்னை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் சாரதி தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், கோயில் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தர்மன், வேணுகோபால்ரமேஷ், பழனி, பெருமாள்குப்பம் ஊராட்சி தலைவர் கோட்டீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ெதாடர்ந்து 3 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பின்னர் மணக்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
The post வள்ளிமலை முருகன் கோயில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் appeared first on Dinakaran.