சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக இரண்டு காவலர்களை இடைநீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண், வியாழன் அன்று (டிசம்பர் 19) உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் இணைந்து வழிப்பறியில் ஈடுபட்டதாக ராஜாசிங் என்ற சிறப்பு எஸ்.ஐ-யும் போதைப்பொருள் விற்றதாக அருண் பாண்டியன் என்ற காவலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறைக்குள் இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பது ஏன்? கண்காணிப்பில் தொய்வு ஏற்படுவது தான் காரணமா?