ராமேசுவரம்: இலங்கையில் உள்ள வவுனியாவில் தமிழக மற்றும் இலங்கை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.
கடந்த ஜனவரியிலிருந்து 20 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு 148 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த காலங்களை விட, தற்போது இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்வது அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும் பதட்டத்தையும் உருவாக்கி உள்ளது.