புதுடெல்லி: டெல்லி பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அதன் தற்போதைய நிலையை மனதில் கொள்ளுமாறு வாக்காளர்களை வலியுறுத்தியுள்ள ராகுல் காந்தி, டெல்லியில் மிகப் பெரிய ஊழல் செய்து யார்? என்று கேள்வி எழுப்பி கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சாடியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வாக்களிக்கும் போது, டெல்லியின் காற்று மாசுக்கு, அசுத்தமான குடிநீருக்கு, மேடு பள்ளமான சாலைகளுக்கு யார் பொறுப்பு என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். தூய்மையான அரசியல் பற்றி பேசும் அதேவேளையில், டெல்லியில் மிகப்பெரிய ஊழல் செய்து யார்?