சென்னை: சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆக.13) கூடியது. இக்கூட்டத்தில், ‘வாக்குத்திருட்டு’ மற்றும் ‘SIR’ (சிறப்பு தீவிர திருத்தம்) நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.